districts

img

சிஐடியு முறைசாரா தொழிலாளர் சங்க இராமநாதபுரம் மாவட்ட பேரவை

இராமநாதபுரம்,செப்.8- இராமநாதபுரம் மாவட்ட முறைசாரா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) ஆண்டு பேரவை இராமேஸ்வரத்தில் நடைபெற்றது. பேரவைக்கு  மாவட்டத் தலைவர் கே.பால் மேலி  தலைமை வகித்தார். டி.இராமச்சந்திரபாபு வர வேற்றுப் பேசினார். சிஐடியு தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. ஞான சேகர் துவக்கி வைத்துப் பேசி னார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர் முத்து விஜயன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ. சந்தானம்  நிறைவுரையாற்றினார். மாநாட்டில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்டத் தலைவராக கே பால்மேலி, மாவட்டச் செயலாளராக ஆர்.முத்து விஜயன், மாவட்டப் பொரு ளாளராக பசலை நாக ராஜன், துணைத் தலைவர்க ளாக டி.இராமச்சந்திரபாபு, ஆர்.மகாலிங்கம், துணைச் செயலாளர்களாக கே.பச்ச மால், என்.பி.செந்தில் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். 55 வயது நிறைந்த பெண் தொழிலாளர்களுக்கு ரூ.3  ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நல வாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதோடு மட்டுமின்றி அலுவலகத்தில் கேட்பு மனு மூலம் உறுப்பினர் பதிவு செய்ய வேண்டும். நலவாரிய உறுப்பினர்களுக்கு பணப் பலன்களை 30 நாட்களுக் குள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.