மதுரை, அக்.9- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் செல்லம்பட்டி ஒன்றிய 10 ஆவது மாநாடு கருமாத் தூரில் ஞாயிறன்று மாலை நடைபெற்றது. மாநாட்டிற்கு ஜோதி பாசு தலைமை வகித்தார்.துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ் வரன் பேசினார். வேலை யறிக்கையை ஒன்றியச் செய லாளர் ஜெ.காசி சமர்ப்பித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் வி.பி.முருகன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க ஒன் றியச் செயலாளர் டி.ரத்தி னம், தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் சங்கத் தலை வர் பி.எஸ்.முத்துப்பாண்டி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன் நிறைவுரை யாற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெயமணி நன்றி கூறினார். மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்ட னர். ஒன்றியத் தலைவராக ஏ.ஆர்.ரவி, ஒன்றியச் செய லாளராக ஜெ.காசி, பொரு ளாளராக சி.ஜோதிபாசு, துணைத் தலைவராக கே. பாண்டி, துணைச் செயலாள ராக த.ஜெயமணி உட்பட 15பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வுசெய்யப்பட்டது. 100நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி சட்டக் கூலி ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். விவ சாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ஒய்வூதியம் ரூ.3ஆயி ரம் வழங்க வேண்டும். , ஜெயராஜ் நகர் - கோட்டை யூர் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.