districts

img

கருங்குளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தூத்துக்குடி,டிச.1 ஸ்ரீவைகுண்டம் தாலூகா தாமிர பரணி மேலக்கால் பாசன கால்வாய் அருகில் உள்ள அப்பன் குளம் கடந்த  வாரம் உடைந்து விட்டது. இந்த குளத்தினை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக மணல் மூடைகள்  அடுக்கும் பணி  நடந்து வருகிறது. சடையனேரி கால்வாய்க்கு தாமிர பரணி ஆற்றில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதற்காக மருதூர் மேலக்கால் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு கால்வாய் குளத்தில் நிரப்பப்பட்டு, அங்கிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. சடைய னேரி கால்வாய்க்கு செல்லும் மதகு திறக்கப்பட்டுள்ளது.. ஆனாலும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் விரைவாக புத்தன்தருவை குளம் நிரம்பும் என விவசாயிகள் கோரி வருகின்றனர். ஐந்தாம் நாளாக மறுகால் ஸ்ரீவைகுண்டம் தாலூகா மணி முத்தாறு பாசனம் மூன்றாவது ரீச்சில் உள்ள குளம் தெற்கு காரசேரி குளம். இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய குளங்களில் இதுவும் ஒன்று. இந்த குளம் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து 5வது நாளாக இந்த குளத்தில் இருந்து மறுகால் பாய்கிறது. இது கண்கொள்ளா காட்சியாக இருக்கி றது. பல வருடங்களாக இந்த குளம்  நிறைந்து பார்க்க மக்களும், இளம் வயதினரும் ஆச்சரியத்துடன் தெற்கு காரசேரி மறுகாலை பார்த்து செல்கி றார்கள்.

வெள்ளப்பெருக்கு தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக் குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணைக்கட்டு பகுதியில் தற்போது அதிகளவு நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், யாரும் ஆற்றுப் பகுதிக்குச் சென்று வேடிக்கை பார்ப்பதற்கும் நீந்துவதற்கும் செல்ல வேண்டாமெ னவும் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் கேட்டுக் கொண்டுள் ளார். தற்போது குற்றாலத்தில் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. எனவே சிற்றாற்றிலும் வெள்ளம் அதிகரித்துள்ளது. சிற்றாறு வெள்ளம் சிவலப்பேரியில் தாமிபரணி ஆற்றில் வந்து சேருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகமான வெள் ளப்பெருக்கு ஏற்படும் என கருதப் படுகிறது. தூத்துககுடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் இரண்டு பக்கமும் கரையை தொட்டு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.

;