மதுரை, ஜூலை 2- காப்பீட்டுக் கழக ஊழியர் சங் கத்தின் மதுரை கோட்ட உழைக்கும் மகளிர் துணைக் குழுவின் 37ஆவது மகளிர் மாநாடு ஜூலை 2 ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு அமைப்பாளர் டி.சித்ரா தலைமை வகித்தார். நகர் கிளை - 4 கிளைத்தலைவர் எஸ்.யுவராணி வரவேற்றுப்பேசி னார். கடல்சார் ஆராய்ச்சியாளர் முனைவர் நாராயணி சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார், ஏஐஐபிஏ செயற்குழு உறுப்பினர் ஜெ. விஜயா, என்.எப்.ஐ.எப். டபிள்யு பழனி கிளை எஸ். சுபாஷிணி, எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கம் அமுதாமாய், அரசு ஊழி யர் சங்க மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் டி. ராஜி ஆகி யோர் வாழ்த்திப்பேசினர். காப்பீட் டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் என்.பி. ரமேஷ்கண் ணன் தொகுப்புரையாற்றினார், தென்மண்டல முன்னாள் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் நிறை வுரையாற்றினார். சாதனை பெண் கௌரவிப்பு எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ் பெண் என்.முத் தமிழ்செல்வி மாநாட்டில் பாராட்டி கௌரவிக்கப்பட்டர். இணை அமைப்பாளர் எம். மல்லிகா நன்றி கூறினார். முன்னதாக கயல் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர்க்கு சிறப்பு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்க வேண்டும். எல்.ஐ.சி அலு வலகங்களில் குழந்தைகள் காப்ப கம் அமைத்திட வேண்டும்.
நாடு முழுவதும் பெண்கள் மற் றும் பெண் குழந்தைகள் மீது அதி கரித்து வரும் வன்முறைகளை தடுத்திட கடுமையான சட்டங் களை அமல்படுத்த வேண்டும். குடும்ப வன்முறை தடுப்புச் சட் டத்தை முறையாக ஒன்றிய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். பெண்கள் சமத்துவத்தை உறுதிப்படுத்திட நீண்ட கால கோரிக்கையான நாடாளுமன்றத் தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை உடனடி யாக ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும். எல்.ஐ.சி பணிநிய மனங்கள் மற்றும் பதவி உயர்வில் கர்ப்பிணி பெண்களுக்கு தொட ரும் பாலியல் பாரபட்ச போக்கினை கலைந்திட வேண்டும்.போதை யற்ற தமிழகத்தை உருவாக மாநில அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் புதிய மகளிர் துணைக் குழு அமைப்பாளராக த.சித்ரா, இணை அமைப்பாளர்களாக எம்.மல்லிகா, சி.பத்மாவதி, எஸ்.மகேஸ்வரி, எஸ்.மஞ்சுளா, எம்.மகாலெட்சுமி, கே.தங்கம், டி. ஷீலாதேவி, டி. கிருத்திகா, பா.சிவரஞ்சனி, ஜெ. வசுமதி, பி.ராஜேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.