districts

img

நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு

திருவில்லிபுத்தூர், ஜூன் 6- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகராட்சி யில் 15 வது மத்திய நிதி குழு மானியத்தின் கீழ் நகர்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் செவ்வாய்க்கிழமையன்று காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது. மேலும் நகர் மன்ற தலை வர் தங்கம் ரவிக் கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் தங்கபாண்டியன், மருத்துவர்கள் சிந்தியா  ஸ்ரீவர்ஷினி, சுகாதார ஆய்வாளர் மற்றும் பலர் பங்கேற்ற னர்.