தென்காசி ,பிப். 8- தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பகுதியில் உள்ள சாலைகள் கேரளாவிற்கு அதிக அளவு கல், மண் பாரங்களை ஏற்றிச் செல்லும் லாரி களால் பாதிக்கப்படுவதாக கூறி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், முன்னாள் எம்எல்ஏ ரவிஅருணன், கீழகட யம் பஞ்சாயத்தலைவர் பூமிநாத், கீழகட யம் கவுன்சிலர் புளி கணேசன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு 10க்கும் மேற் பட்ட லாரிகளை சிறை பிடித்ததால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்பு லாரிகளை விடுவித்தனர்.