districts

img

கடமலை-மயிலையில் 18 ஊராட்சிகளில் கிராம சபை

கடமலை-மயிலையில்  18 ஊராட்சிகளில் கிராம சபை  கடமலைக்குண்டு, அக்.2- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு 18 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களில் நடைபெற்றது. தும்மக்குண்டு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு சின்னக்காளை தலைமை தாங்கி னார். ஊராட்சி செயலர் சின்னச்சாமி முன்னிலை வகித்தார். கடமலை-மயிலை ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஷ்  கலந்து கொண்டார். கூட்டத்தில் வருசநாடு முதல் வாலிப்  பாறை வரையிலான சேதமடைந்த சாலையை உட னடியாக சீரமைக்க வேண்டும், கிராமங்களில் குடிநீர்  தட்டுப்பாடு அபாயத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலை வர் மாயகிருஷ்ணன் தலைமையிலும், வருசநாடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து தலை மையிலும், மயிலாடும்பாறை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பில் சுந்தர பாரதம் தலைமையிலும், கடமலைக்குண்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம் தலைமையிலும், மேகமலை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பால்கண்ணன் தலை மையிலும், எட்டப்பராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராசாத்தி பால்ச்சாமி தலைமையிலும், பொன்  னன்படுகை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கா காத்தமுத்து தலைமையிலும், குமணன்தொழு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையிலும்,முருக்கோடை ஊராட்சி மன்ற தலை வர் குருவம்மாள் தலைமையிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.  இதில் கிராமங்களில் ஏற்படுத்த வேண்டிய அடிப்  படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

;