விருதுநகர், டிச.3- விபத்தில் காயமடைந்து கால் மூட்டில் ஜவ்வு பாதிப்பால் நடக்க முடியாமல் அவ திப்பட்டவருக்கு நவீன முறையில் அறுவை சிக்சை செய்து குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர் விருதநகர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவர்கள். விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஜனகமுத்துராஜ்(34) என்பவர் உள் நோயா ளியாக சேர்க்கப்பட்டார். இவருக்கு விபத் தில் கால் மூட்டு ஜவ்வுகள் கிழந்தன. இத னால், இவரது காலை தரையில் உறுதி யாக ஊன்ற முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரி முதல்வர் சங்குமணியின் வழி காட்டுதலின்பேரில், நவீன முறையில், கால் மூட்டில் நுண் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்து ஜவ்வுகளை சரி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இணை பேராசியர்கள் மரு. மகேஸ்வரன் தலைமையில், மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களான மருத்து வர்கள் வெங்கடேஸ்வரன், அவினாஷ் ஆகி யோர் ஜனகமுத்துராஜூக்கு வலது கால் மூட்டில் நுண் துளையிட்டு ஜவ்வுகளை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துள்ளனர். விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சிகிச்சை முறை முதன் முதலாக பயன் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.