districts

மதுரை முக்கிய செய்திகள்

மிளகாய் பொடி தூவி  தங்க நகை பறிப்பு

அருப்புக்கோட்டை, செப்.16- அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங் குளத்தைச் சேர்ந்தவர் தீபா(46). இவரது மகள் ஆர்த்தி. இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், அங்கு 35 வயதுள்ள பெண் ஒருவர் வந்துள்ளார். திடீரென ஆர்த்தியின் முகத்தில் மிளகாய்பொடியை தூவி யுள்ளார். பின்பு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 3பவுன் தங்க சங்கிலையை பறித்துள்ளார். அப்போது, ஆர்த்தி சங்கிலியை இறுகப் பிடித்துள்ளார். இதில் முக்கால் பகுதி செயினை மர்மப் பெண் பறித்துக் கொண்டு தப்பி யோடிவிட்டார். இச்சம்பவம் குறித்து தீபா கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார்வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலமானார்

மதுரை, செப்.16- மதுரை  மாநகர் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.பாண்டியின் தாயார் ஆர். கழுவாயி அம்மாள் (82) வியாழனன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் மாநி லச்செயற்குழு  உறுப்பினர் எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் அ.  ரமேஷ், டி. செல்வா, எம். பாலசுப்பிரமணியம், துணை மேயர் டி. நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பி. ராதா,  பி. கோபிநாத், மேற்கு - 2 பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில் குமார்,  சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. தெய்வராஜ், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். சந்தியாகு மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத் தினர். இறுதி  நிகழ்ச்சி கருமாத்தூரில் நடைபெற்றது. 

போடி, சின்னமனூரில்  மூதாட்டி இருவர் தற்கொலை

தேனி , செப். 16 - நோய் காரணமாக  போடி மற்றும் சின்னமனூரில்  மூதாட்டி இருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  போடி சுந்தரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (88). இவருக்கு வயதான நிலையில் சர்க்கரை, ரத்த அழுத்த நோயும்  இருந்துள்ளது. இவரது மகள் முத்துலட்சுமி (55) பராமரித்து வந் துள்ளார். நோயுடன் வாழ பிடிக்கவில்லை என புலம்பிக் கொண்டிருந்த நிலையில்வியாழக்கிழமை மாலை பூஜை அறை யில் தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில்  அவரை  தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சேர்த்த தில் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் இறந்தார்.  இதுகுறித்து முத்துலட்சுமி வெள்ளிக்கிழமை கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சின்னமனூர் அருகே கன்னிசேர்வை பட்டியை சேர்ந்தவர் சங்கர்ராஜ் மனைவி ராஜாத்தி(70). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விஷமருந்தை குடித்து மயங்கினார். சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் காவல் துறையினர்  விசாரித்து வருகின்றனர்.

சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு  தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தேனி ,செப்.16- சிறுமியின் மரணத்திற்கு  நீதி கேட்டு  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வீரத்தி யாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பூங்கா அமைப்பதற்காக தோண்டிய குழியில் தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து ஹாசினி ராணி (வயது 8) என்ற சிறுமி கடந்த 6 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சிறுமியின்  மரணத்திற்கு நீதி கேட்டு  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறு வனர் செல்வம் தலைமை தாங்கினார்.  சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் பூங்கா கட்டுமான பணியில் அலட்சியமாக இருந்த ஒப்பந்ததாரர், பேரூராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு : கணவர் உட்பட  3 பேர் மீது வழக்கு

காரியாபட்டி, செப்.16- காரியாபட்டி அருகே உள்ள மாங்குளத்தில் மர்மமான முறையில் இளம் பெண் உயிரிழந்துள்ளார். காவல்துறை க்கு தெரிவிக்காமல் உடலை எரியூட்டிய கணவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ளது மாங்குளம் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரது மனைவி பிரியதர்ஷினி(22). இவர் கடந்த செப்டம்பர் 15 அன்று இரவு வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவிக்கா மல் மாங்குளம் சுடுகாட்டில் உடலை எரியூட்டியுள்ளனர். இதுகுறித்து மாங்குளம் கிராம நிர்வாக அலுவலர் நாகராஜ், ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரியதர்ஷினியின் கணவர் மலைச்சாமி, அவரது தந்தை முருகன், தாய் பிரியா ஆகியோரிடம் விசாரைண நடத்தி வருகின்றனர்.

காலமானார்

மதுரை, செப் 15-  மதுரை மாநகர் மேற்கு - 2 ஆம் பகுதிக்குழு பாரதியார் தெரு மூத்த கட்சி உறுப்பினர் சங்கரநாராயணனின்  மனைவியும், பாரதியார் தெரு முன்னாள் கட்சி கிளைச் செயலாளர் எஸ். ரவிசங்கரின் தாயாருமான மீனாம் பிகை வியாழனன்று காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து  கட்சியின் மாநி லச்செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் மா.  கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆ.ரமேஷ், எம்.பாலசுப்பிரமணியம், டி. செல்வா, பகு திக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், துணை மேயர் டி.நாகராஜ், உள்ளிட்ட  பலர் அஞ்சலி செலுத்தினர். 

கடைகளில் நெகிழிப்பைகள் பறிமுதல்

திருவில்லிபுத்தூர், செப்.16-  திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மை மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆணை யாளர் உத்தரவின் பேரில் நகர சுகாதாரத்துறை சார்பில் திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம், மார்க்கெட் பஜார், நேதாஜி ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டன.  இதில் 50 கிலோ நெகிழிப்பைகள் கைப்பற்றப்பட்டன. பைகளை வைத்திருந்த உரிமையாளர்களிடத்தில் ரூ.10 ஆயிரத்து 300 அபராத தொகையாக வசூல் செய்யப் பட்டது. நெகிழிப்பை சோதனையில் சுகாதார ஆய்வா ளர்கள் சந்திரா, சரவணன், சுகாதார மேற்பார்வையா ளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் ஊக்கு நர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதுரையில் மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை செப் .16- மின்சார சட்ட மசோதா 2022ஐ திரும்பப்பெற வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனே துவக்கி நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும்.   56ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மதுரை கிளை, மதுரை பெருநகர், ஜி ஜி சி மதுரை கிளைகள் சார்பில்  மதுரை தலைமை பொறி யாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மதுரை கிளை தலைவர் எஸ்.திருமுருகன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.தெய்வராஜ், சிஐடியு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அர விந்தன், பொறியாளர் சங்கம் மாநில அமைப்புச் செய லாளர்  கே.ஜீவானந்தம், மதுரை கிளை திட்டச் செயலாளர் சி.செல்வராஜ், மதுரை பெருநகர் திட்டச் செயலாளர் டி.அறிவழகன்  ஆகியோர் பேசினர்.  திட்டப் பொருளா ளர் ஆர்.சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.