districts

img

மரியா சித்த மருத்துவக் கல்லூரியின் இலவச மருத்துவ முகாம்

திருவட்டார், டிச. 7- கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆற்றூர் மரியா கல்வி குழுமத்தின் சித்தா  மருத்துவ கல்லூரியின் சார்பில் செவரக்கோடு சி.எஸ்.ஐ ஆலய வளாகத்தில்  இலவச மருத்துவ முகாம் கல்லூரி முதல்வர் டாக்டர் செளந்தர்ராஜ் தலைமை யில் நடைபெற்றது. இம்முகாமில் எல்லா வயதி னருக்கும் பலவகையான நோய் களுக்கான மருத்துவமும் மற்றும் நோய்கள் வராமல் தடுப்ப தற்கான முறைகளும் பொது மக்களுக்கு மருத்துவர்கள் எடுத்து விளக்கினார்கள். இவ் மருத்துவ குழந்தைகள், பெரிய வர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமா னோர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். டாக்டர் மெர்லின் ஷீபா, கல்வி குழும ஒருங்கி ணைப்பாளர் குமாரி தீபா, முகாம் ஒருங் கிணைப்பாளர் டாக்டர் வில்ஸ் ஸ்டுபர்ட், ஸ்டாலின் உட்பட மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற னர்.

;