districts

img

கைதான தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு

மதுரை, டிச.21- புதுக்கோட்டை மற்றும் மயிலாடு துறை மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 14 தமிழக மீனவர்கள், சர்வ தேச கடல் எல்லையைக் (ஐஎம்பிஎல்) கடந்ததாகக் கூறி இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஏழு பேர் மயிலாடு துறையைச் சேர்ந்தவர்கள், மீத முள்ளவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். இராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி பிரதேச மீனவர்கள் 69 பேரையும் அவர்களின் 10 படகு களையும் இலங்கை கடற்படை பிடித் துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிலரை கையை உயர்த்தி நிற்கச் செய்து  அவர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடித்துள்ளனர். கட்டடம், வாகனம் போன்ற உயிரற்ற பொருட்கள் மீது தெளிக்கக்கூடிய கிருமி நாசினியை மீனவர்கள் மீது பீய்ச்சி அடித்தது அப் பட்டமான மனித உரிமை மீறல். இந்த மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச மனித உரிமை ஆணையம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடித் தொழிற் சங்க கூட்டமைப்பின் (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி நமது செய்தியாளரிடம் செவ்வாயன்று தெரி வித்தார். இதே கருத்தை தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ-வும் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “உலக சுகாதார நிறுவனம் உரிய கண்ட னத்தை வெளியிட வேண்டும். இதில் ஈடுபட்டோர் மீது இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசால் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மீன வர்களையும், படகுகளையும் விடு விக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன் றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் அனுப்பி யுள்ளோம். இந்திய-இலங்கை மீனவர் பிரச்ச னையைத் தீர்க்க இரு நாட்டு மீன வர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பி யுள்ளோம்’’ என்றார்.

;