districts

img

தென்னை, வாழை உட்பட 100 ஏக்கர் விளைநிலங்களில் குளம் போல் தேங்கிய மழைநீர்

சின்னாளப்பட்டி, செப்.6-  திண்டுக்கல் அருகே விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் 100-க்கும்  மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, கொடைரோடு, சிறுமலை,பள்ளபட்டி ஆகிய பகுதிகளில் திங்களன்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இப்பகுதி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்க ளுக்கு பாசன வசதிக்காகவும் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் மாவூர்  அணை, பொதுப்பணித் துறையினரின் அஜாக்கிரதையால் பராமரிப்பின்றி இருந் தது. இதனால் ஒருநாள் கனமழைக்கே நிரம்பி மறுகால் சென்ற மழைநீர் கன்னி மார் காட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு, கரைகள் உடைந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. 100-க்கும் மேற் பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் சுமார் 5-8 அடி வரை தண்ணீர் தேங்கியது.  இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட் டுள்ள தென்னை,வாழை,கொய்யா மற்றும் ரோஸ், மல்லி, சாதிப்பூ, செண்டுமல்லி,  வாடாமல்லி ஆகியவையும் நீரில் முற்றி லும் மூழ்கி நாசமானது. மேலும் 5- கிணறு கள், 10-க்கும் மேற்பட்ட போர்வெல்கள் மழை வெள்ளத்தில் இடிந்து சேதமாகி யுள்ளன. இச்சம்பவம் விவசாயிகளிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உரிய ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;