தேனி, ஜன.10- கார்ப்பரேட் முதலாளி களுக்கு ஆதரவான உர விலை உயர்வை திரும்பப்பெற வேண் டும், உர பதுக்கலை தடுத்து விவ சாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லா மல் உரம் வழங்கவேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் போடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . போடி வள்ளுவர் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் இ.மூக்கையா தலைமை வகித்தார். தாலுகாச் செயலாளர் எஸ்.கே.பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன், மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எஸ்.செல் வம், விவசாயிகள் சங்க நிர்வாகி தங்கபாண்டி, பழனிசாமி, காம ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.