மதுரை,செப்.15- ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பாக அதன் நிர்வாகத் தலைவர் டாக்டர் கல்பனா சங்கரின் ஆலோசனைப்படி முத்தூட் நிதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் வழிகாட்டும் இலவச சிறப்பு பயிற்சி மதுரை,சென்னை, கோயம்புத்தூர், திருப்புத்தூர், பெங்களூர் விஜயவாடா, பூனா உள்ளிட்ட பல பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன. ஆன் லைன் வழியாக 25 நாட்களும் நேரடியாக 10 தினங்களும் இந்தப் பயிற்சிகள் நடத்தப் படுகின்றன. மதுரையில் சரஸ்வதிநாராயணன் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்க கல்லூர அரசு கலை கல்லூரியில் இந்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சி முடிவு பெற்றபிறகு இவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படு கின்றது. இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்க ளுக்கு பணியில் சேர்வதற்கான பணி அணை வழங்கப்பட்டது. மொத்தம் 54 பேருக்கு இந்த பணி அணைகள் வழங்கப்பட்டது.அவர் கள் ஜே எல் வி எம் என்ற நிறுவனத்தில் 18 பேரும் ஷிவ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் 18 பேரும் லித்தி இன்ஃபோ டெக் என்ற நிறு வனத்தில் 18 பேரும் வேலைக்கு அமர்த்தப் பட்டு உள்ளனர் இந்த நிகழ்வில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா துணை பொது மேலாளர் ஜெயப் பிரகாஷ் முதன்மை மேலாளர் அருள்குமார் மதுரை பயிற்சி மேலாளர் அன்பு விஜய், எஸ். ஆர்.எம். நிர்வாகி அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.