districts

img

மின்வாரிய ஓய்வூதியர்கள் மேலாடையின்றி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,அக். 11 புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும், காசு இல்லா மருத்துவ காப்பீடு திட்டத்தை மின் வாரியம் ஏற்று நடத்த வேண்டும், முடக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம், விதவை, விவாகரத்தானவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியத்தை  வழங்கிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மேலாடை இன்றி ஓய்வூதி யர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தூத்துக் குடி மாவட்டத் தலைவர் முத்து சாமி தலைமை வகித்தார். மாநில உப தலைவர் திருத்துவராஜ் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் மாசிலா மணி, மாவட்டப் பொருளாளர் ஜெயராமன், மாவட்ட இணைச் செயலாளர் தங்கராஜ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் குமார வேல், மாவட்ட துணைத் தலைவர்  ரவி தாகூர் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர்.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டச் செயலாளர் குண்ணிமலையான், அனைத்து துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு மாவட்டச் செயலாளர் ராம மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில உப தலை வர் ஜெயபாண்டி நிறைவுரை யாற்றினார். அலுவலக செயலா ளர் தானு மலையான் நன்றியுரை ஆற்றினார்.

திருநெல்வேலி 

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பாளை தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க் கிழமை அரைநிர்வாண போராட்டத் தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மேல்சட்டை அணியா மலும், பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டியும் கலந்து கொண்ட னர். இந்த போராட்டத்திற்கு சங்க  மாநில துணைத்தலைவர் கருப்பை யா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார்.  இந்தப் போராட்டத்தில் சங்க  மாவட்ட துணைத் தலைவர் தியாக ராஜன், நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் பீர் முகமது ஷா ,திட்ட செயலாளர்  கந்தசாமி ஆகியோர் பேசினர்.  கண்டனம் இதைத்தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டவர்களுடன் மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், காவல் ஆய்வாளர் வாசிவம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதி இல்லாமல் நடந்த போராட்டம் எனக் கூறி காவல்துறை அனுமதி மறுத்த தால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும் போராட்டம் நடத்திய வர்களை  காவல்துறை கலைத்த தால் இந்த செயலுக்கு சிஐடியு மாவட்ட குழு கண்டனத்தை தெரி வித்துள்ளது.
 

;