districts

img

சாத்தூர் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சாத்தூர், அக்.10- விருதுநகர் மாவட்டம் சாத்தூ ரில் உள்ள அரசு கலை மற்றும் அறி வியல் கல்லுரியில் இந்திய மாண வர் சங்கம் சார்பில் குடிநீர், கழிப் பிடம் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடை பெற்றது. சாத்தூர் அருகே உள்ள மேட்ட மலையில் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி உள்ளது. இங்கு ஏரா ளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  கல்லூரியில் மாண வர்களுக்குத் தேவையான குடிநீர்,   கழிப்பிடம் ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை. மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. மாணவர்களுக்கு அடை யாள அட்டை தற்போது வரை  வழங்கப்படவில்லை. மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்லும் நேரங்  களில் அரசுப் பேருந்துகள் இல்லை.  இதனால், மாணவர்கள் கூடுத லான கட்டணங்களை வழங்கி தனி யார் பேருந்துகளில் பயணம் செய்  யும் நிலை ஏற்பட்டுள்ளது. போது மான ஆசிரியர்கள் பணியில் இல் லாததால்  மாணவர்கள் கல்வி கற்ப தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.   இதுகுறித்து கல்லூரி நிர்வா கத்திடம் பலமுறை புகார் தெரி வித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால், கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும்  இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, சரத் குமார், அஞ்சலி தேவி, சூர்யா,  ஓம்பிரகாஷ் ஆகியோர் தலைமை யில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து  வந்த கல்லூரி முதல்வர் முத்துக்குமார், துணை முதல்வர் மகேந்திரன், வட்டாட்சி யர் வெங்கடேஷ் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூர்ய மூர்த்தி ஆகியோர் போராட்டக்கா ரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். முடிவில், வரும் அக்.25-ஆம்  தேதிக்குள் பெரும்பாலான கோரிக்  கைகளை நிறைவேற்றித் தருவ தாக உறுதியளித்தனர். இதைய டுத்து போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது.