districts

img

மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி

தூத்துக்குடி, செப்.18- தூத்துக்குடி ஊரக ஸ்கேட்டிங் விளையாட்டு சங்கம் மற்றும் சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பாக பெண் குழந்தைகள் பாது காப்பு குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் ஞாயி றன்று  தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் 2022ம்  ஆண்டுக்கான மாநில அளவி லான முதலாவது ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்  போட்டியில் தேனி, திண்டுக்  கல், மதுரை, கோயம்புத் தூர், திருப்பூர், தென்காசி,  விருதுநகர், தூத்துக்குடி, சிவகாசி ஆகிய மாவட்டங்க ளிலிருந்து 350 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியின் சார்பாக 120 மாணவ - மாணவிகள் கலந்து  கொண்டனர். இப்போட்டி யை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  பேசுகையில், இப்போட்டி களுக்கு ஏற்பாடு செய்த சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியினருக்கும், போட் டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித் தார்.

தற்போது உள்ள சூழ்  நிலையில் செல்போன் என் பது அவசியமான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. செல்போன்களை குழந்தை கள் பயன்படுத்தும்போது பெற்றோர்களின் கண்கா ணிப்பு மிகவும் முக்கியமான தாகும். நீங்கள் செல்போன் களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்  டும். செல்போன்களில் நேரத்தை செலவிடுவதை முற்றிலும்  தவிர்த்து விளையாட்டுகளி லும் கவனம் செலுத்த வேண் டும். பிரச்சனைகளுக்கு தீர்வு  தற்கொலை முடிவு இல்லை.  பிரச்சனைகளை கண்டு பயப்  படாமல் அதற்கான தீர்வு களை மன தைரியத்தோடு அணுக பழகிக் கொள்ள வேண்டும். முயன்றால் முடி யாதது எதுவும் இல்லை. மேலும்  விளையாட்டுகள் நமது மன உளைச்சலை தீர்த்து நம்மை  புத்துணர்ச்சியோடு வைத்தி ருக்கும். நீங்கள் நல்ல எண்  ணங்களை வளர்த்து கொண்டு மற்றவர்களுக்கு முடிந்த அளவு நன்மைகளை செய்து உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். மனச்சோர்வு இல்லாமல் இருந்தால் நீங்கள் வாழ்க்  கையில் சாதனையாளர் களாக திகழலாம். எனவே மாணவ மாணவிகளாகிய நீங்கள் செல்போன்களை அதிகமாக உபயோகப் படுத்துவதை தவிர்த்து கல்வியோடு சேர்ந்து விளை யாட்டுகளிலும் பங்கேற்று பல வெற்றி பெற்று சாதனை யாளர்களாக வரவேண்டும் என்று வாழ்த்தி தனது சிறப்பு ரையை நிறைவு செய்தார். இப்போட்டிக்கான ஏற் பாடுகளை தூத்துக்குடி சிக ரம் ரோலர் ஸ்கேட்டிங் அகா டமியின் நிறுவனர்  ஜோசப் ராஜ், பயிற்சியாளர்கள் அபி சேக் மற்றும் . கார்த்திக் ஆகி யோர் செய்திருந்தனர். இப் போட்டியில் பல பள்ளி மாணவ மாணவிகள் மற்றும்  பெற்றோர்கள் கலந்து கொண் டனர்.

;