districts

img

ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணி

நாகர்கோவில், செப்.12- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு பேரணியினை திங்களன்று (செப்.12) கொயடிசைத்து துவக்கி வைத்தார். பின்னர் இதுகுறிதது ஆட்சியர் தெரிவிக்கையில், தேசிய ஊட்டச்சத்து மாதமானது 2018 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 1-முதல் 30 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான மைய கருத்து ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டு தல் (Poshan Panchayat)  இதனை வலியுறுத்தும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் ஊட்டச்சத்து குறித்த வாசகங்கள் அடங்கிய ஊட்டச்சத்து பேரணி  துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஊட்டச் சத்து  நிறைந்த உணவுப்பொருட்கள் செய்து பொதுமக்களின் பார்வைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஊட்டச்சத்து கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து  குறைவினால் பல்வேறு நோய்கள் வருவதால், அதனை தவிர்ப்பதற்காக பெற்றோர் கள் தங்களது குழந்தைகளுக்கும் மற்றும் பொதுமக்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள் வதோடு, நமது மாவட்டம் ஊட்டச்சத்து குறைவு இல்லா மாவட்டமாக திகழ்ந்திட  அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சி யர் தலைமையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி யினை அனைத்து அரசு அலுவலர்க ளும் எடுத்துக்கொண்டார்கள். இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலு வலர் அ.சிவப்பிரியா, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி, மாவட்ட ஆட்சி யாளர் அலுவலக பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;