திண்டுக்கல், ஜூன் 7- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சாரபாக செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் ஒன்றியச்செயலாளர் பெரியசாமி தலைமை வகித் தார். ஒன்றியக்குழு உறுப்பி னர் முத்துக்குமார் முன் னிலை வகித்தார். பேரூராட்சி யின் துப்புரவு பணி, டேங்க் ஆப்ரேட்டர் பணிக்கு லஞ்சம் கேட்பதை தடுத்து நிறுத்த வேண்டும். குடிநீர் ஆப்ரேட்டர் ஒருவரை பேரூ ராட்சி அலுவலகத்தில் அடித்து தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை செய்திட வேண் டும். எரியோடு, குண்டாம் பட்டி, அண்ணாநகர் குடிநீர், சாலை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர் பபாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. முத்துச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட் டோர் பேசினர்.