districts

img

லாரியில் மணல் அள்ள தடை கோரி ஆட்சியரிடம் சிபிஎம் மனு

தூத்துக்குடி, செப். 12 மார்த்தாண்டம் பட்டி மணல் குவாரியில் மாட்டுவண்டி களுக்கு அனுமதி வழங்கவும் லாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கோரி ஆட்சியர் அலுவல கத்தில் சிபிஎம் மனு தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் வைப்பாற்றில் உள்ளூர் கட்டு மான தேவைகளுக்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி கொள்ள அனு மதி கேட்டு 2017 ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு தொழிற்சங்கம் மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் இணைந்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு விளாத்திகுளம், மார்த்தாண்டம் பட்டி, ஆற்றங்கரை ஆகிய இடங்களில் மாட்டுவண்டி களுக்கு குவாரி அமைப்பது தொடர்பாக கனிமம் மற்றும் சுரங்க துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், புவியியல் துறை அதிகாரிகள், நீர் மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கும் தொடர்ந்து வலி யுறுத்தியதன் பேரில் ஆய்வு மேற்கொண்டு இறுதியில் மந்திக்குளம் சர்வே எண் 431 ல் வருவாய் கோட் டாட்சியர் கோவில்பட்டி தலைமையி லான கூட்டுக் குழுவினர் 30-7-2018இல் புலத் தணிக்கை செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப் பட்டு கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது அந்த அறிக்கையினடிப்படையில் மாட்டு வண்டிகளுக்கு குவாரி அமைப்ப தற்கு பதில் அதை திருத்தி லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள குவாரி அமைக்கலாம் என்ற கனி மம் மற்றும் சுரங்கத்துறையினுடைய முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது ஏற்கனவே கூறியபடி மந்திக்குளம்  சர்வே எண் 431 ல் மாட்டு வண்டி களுக்கு கனரக இயந்திரங்கள் அல்லாமல் 3 அடி ஆழம் மட்டும் மண் அள்ளி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  அதே நேரத்தில் கனரக இயந்தி ரங்கள் மூலம் மணல் அள்ளி லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்வதற்கு போடப்பட்ட உத்தரவையும் ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவி ராஜ், விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் விளாத்திகுளம் ஒன்றி யச் செயலாளர் ராமலிங்கம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;