சிவகங்கை, நவ.8- சிவகங்கை மாவட்டம் பனிக்கனேந் தல் மூன்று கண்மாய் பாசனத்தில் உள்ள 75 ஏக்கர் விளை நிலங்களில் இருந்த பயிர் களை மாடுகள் சேதப்படுத்தியதாக சிபிஎம், விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டாட்சியரி டம் புகார் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பணிக்கனேந்தல் கிராம விவசாயி கள் மூன்று கண்மாய்களை நம்பித்தான் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பூச்சிகள், பன்றி களால் பாதிப்பு ஏற்பட்டது போக தற்போது மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட் டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரி வித்துள்ளனர். இப்பகுதிகளில் மாடுகள் வளர்ப்போர் மாலை நேரங்களில் மாடு களை அவிழ்த்து விடுவதால், 75 ஏக்கர் விளை நிலங்களில் இருந்த பயிர்களை மாடுகள் அழித்துவிட்டன. இது தொடர்பாக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி, சிபிஎம் மானாமதுரை ஒன்றியச் செயலாளர் ஆண்டி மற்றும் விவசாயிகள் மானா மதுரை வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் மனு வினை அளித்தனர். புகாரினை பெற்று கொண்ட வட்டாட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.