districts

img

நிலக்கோட்டை யூனியன் தலைவர், துணைத் தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சின்னாளபட்டி,ஆக.05- நிலக்கோட்டை யூனியனில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் பொதுநிதி செலவினம் குறித்து கேள்வி எழுப்பிய கவுன்சிலர்களுக்கு பதிலளிக்காத தலைவர் துணைத்தலைவரைக் கண்டித்து 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யூனியனில் மாதாந்திர கூட்டம் நடந்தது, கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் ரெஜினாநாயகம் தலைமை வகித்தார் துணை தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார்,  கூட்டத்தில் திமுக கவுன்சிலர் அறிவு சின்னமாயன் மற்றும் திமுக ஆதரவு சுயேட்சை கவுன்சிலர் கணேசன் ஆகியோர் கடந்த ஓராண்டாக நிலக்கோட்டை யூனியனில் உள்ள 23 பஞ்சாயத்துகளில் அடிப்படை பணிகள் செய்யாமல் அரசு பொது நிதியை செலவு செய்வதில் பாரபட்சம் காட்டி திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்க ளின் வார்டுகள் புறக்கணிப்பதாகவும் பொது நிதி குறித்து  எந்த வரவு செலவு கணக்குகளும் கொடுப்பதில்லை என வும், ஊராட்சி பகுதியிலுள்ள அங்கன்வாடி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பழய அரசு கட்டிடங்கள் கவுன்சிலர்களுக்கு தெரியாமல் அதிகாரிகள் தன்னிசை யாக முடிவெடுத்து இடித்துவிட்டு தற்போது கூட்டத்தில் ஒப்புதல் கேட்பதை ஏற்க முடியாது, தமிழக அரசின் புதிய நலத்திட்டங்கள் பணிகள் செயல்படுத்தபடாமல் முடக்கப்படுவதாகவும் அது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர். ஆனால் அதுகுறித்து  அதிமுக ஒன்றிய செயலாளரும் துணைத் தலைவருமா கிய யாகப்பன் மற்றும் தலைவர் ரெஜினாநாயகமும் உரிய பதிலளிக்காததால் திமுக கவுன்சிலர் லலிதா மணி கண்டன் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் ரூபிசகிலா, தியாகு,வசந்தா அழகேசன்,செல்வி கபடிமுத்து,சுதந்திர தேவி,பாலமுருகன் மற்றும் திமுக ஆதரவு கவுன்சிலர் கள் கணேசன்,நாகராஜ், பாலமுருகன் உட்பட 13-பேர் வெளிநடப்பு செய்தனர்.

;