districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3000 வழங்குக! கட்டுமான தொழிலாளர் மாநாடு கோரிக்கை

தென்காசி, செப். 13 தென்காசி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க முதல் மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு எம் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநாட்டை தூக்கி வைத்து மாநிலத் தலைவர் கே. பி.பெருமாள் பேசினார். மாநாட்டில் மாவட்டச் செயலாளரின் அறிக்கையும் பொருளாளர் அறிக்கையும் முன் வைக்கப் பட்டன.  நிறைவாக சிஐடியு மாவட்டத் தலைவர் அயூப் கான் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்டத் தலைவராக எம்.மணிகண்டன், மாவட்டச் செயலாளராக எம்.லெனின் குமார், மாவட்டப் பொருளா ளராக ஜி.பிச்சுமணி உள் ளிட்ட மாவட்டக் குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்ட பீடி தொழிலா ளர் சங்க செயலாளர் கே.மகா விஷ்ணு உள்ளிட்ட சகோ தர சங்க தலைவர்கள் மாநாட்டை வாழ்த்தி பேசி னர். மாநாட்டில் மாவட்டம் முழுமையிலிருந்து 150 க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் 50  வயது  அடைந்த கட்டுமான தொழி லாளர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும். குறைந்த பட்ச பென்ஷன் ரூபாய் 3000 வழங்க வேண்டும்.  கட்டுமான பொருட்க ளின் விலை உயர்வை கட்டுப் படுத்தி ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை அரசுகள் பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;