மன்னாடிமங்கலம் வைகை ஆற்றில் பாலம் கட்டுக!!
மதுரை, டிச.24- சோழவந்தானில் அரசு கலை அறிவியில் கல்லூரி அமைக்க வேண்டும். மன்னாடிமங்கலத்தில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் .மதுரை தோப்பூ ரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டு மானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு மக்கள் கோரிக்கை களை வலியுறுத்தி மதுரை புறநகர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் 400 கிலோமீட் டர் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். வாடிப்பட்டி தாலுகா குரு வித்துறையில் இருந்து டிசம்பர் 24 சனிக்கிழமையன்று நடை பயணம் துவங்கியது. மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், தென்கரை வழி யாக சோழவந்தானில் நண்பகல் நிறைவடைந்தது. மாலையில் சோழவந்தானில் தொடங்கிய நடை பயணம் வாடிப்பட்டி பகுதியில் நிறைவடைந்தது. ஞாயிறு, திங் கள்கிழமைகளில் அலங்கா நல்லூர், மேற்கு ஒன்றியப் பகுதி களில் நடைபயணம் நடைபெறு கிறது.
பயணத்தில் பங்கேற்ற 89 வயது மூத்த தோழர்
நடைபயணத்தில் தேவசேரி யைச் சேர்ந்த 89 வயதான மூத்த தோழர் ஏ.ராமராஜ் பங்கேற்றுள் ளார். இது இவருக்கு ஒன்பதாவது நடைபயணம் ஆகும். நடைபயணம் குறித்து அவர் கூறுகையில், 1952-55ஆம் ஆண்டு களில் தேனி மாவட்டம் அன்னஞ்சி யிலிருந்து மதுரை ஞாயிற்றுக் கிழமை சந்தை வரை நடைபெற்ற நடைபயணமே முதலாவது பயணம். தற்போது ஒன்பதாவது நடைபயணத்தில் பங்கேற்றுள் ளேன். முல்லைப் பெரியாறு பாச னப்பகுதிகளில் உள்ள வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண் டும். மேலூர் கடைமடைப் பகுதி வரை தண்ணீர் செல்வதை உறு திப்படுத்த வேண்டும். சாத்தையாறு அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நாம் வலியுறுத்துகிறோம். இந்தக் கோரிக்கைகள் பல்லாயிரக்க ணக்கான விவசாயிகளின் வாழ்வா தாரம் தொடர்பானவை என்றார்
மாணவ-மாணவிகள் பங்கேற்பு
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளான கட்சி உறுப்பினர்களின் பிள்ளைகளும் நடைபயணத்தில் பங்கேற்றனர். ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும் என்று இவர் கள் வலியுறுத்தினர். பயணத்தில் பங்கேற்ற பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த கி. அகிலா என்ற மாணவி கூறுகையில், அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துவருகிறேன். தனது அம்மா வுடன் பயணத்தில் பங்கேற்றுள் ளேன். தொடர்ந்து பங்கேற்பேன் என்றார். மற்றொரு மாணவியிடம் பேசி யபோது, மதுரையில் ஒரே ஒரு பெண்கள் அரசு கலைக்கல்லூரி மட்டுமே உள்ளது. கூடுதலாக அரசு கலைக் கல்லூரி திறந்தால் எங்க ளைப் போன்ற கிராமப்புற மாணவி கள் குறைந்த கட்டணத்தில் கல்லூ ரிக்கு செல்லமுடியும் என்று கூறி னார். கிராமப்புறங்களில் 100 வேலை யில் 100 நாட்களும் வேலை வழங்க வில்லை. சட்டக்கூலி வழங்க வில்லை என்று பெண்கள் கூறி னர். நடைபயணத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், இடைக்கமிட்டி செயலாளர்கள் பி.ஜீவானந்தம் (மேற்கு), ஏ.வேல்பாண்டி (வாடிப் பட்டி), ஆண்டிச்சாமி (அலங்கா நல்லூர்), மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உமாமகேஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மலர்விழி, மலைக்கண்ணன், பால கிருஷ்ணன், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர், மதுரை மேற்கு பகுதி களைச் சேர்ந்த கிளைச் செயலா ளர்கள், கிளை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலூரில் தொழிற்பேட்டை அமைத்திடுக!
மேலூர் பகுதியில் அரசு தொழிற் பேட்டை அமைக்க வேண்டும். மதுரை கிழக்கு தாலுகாவில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சனிக்கிழமையன்று கொட் டாம்பாட்டியில் நடைபயணம் துவங்கியது. மாநிலக்குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன் துவக்கி வைத்துப் பேசினார். பின்னர் கருங்காலக்குடி, மணப் பட்டி, தும்பைபட்டி, மேலூர் நகர் பகுதிகளில் நடைபயணம் மேற் கொண்டனர். இந்த பயணக்குழுவில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.செல்லக்கண்ணு, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், கிழக்கு தாலுகா செயலாளர் எம்.கலைச்செல்வன், சிஐடியு மாவட்டத் தலைவர் செ. கண்ணன், போக்குவரத்து இடைக் கமிட்டிச் செயலாளர் டி.மாரி யப்பன், மின் அரங்க கன்வீனர் ஆர். சுரேஷ் குமார், கே.ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருங்காலக்குடியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் பக்ரூ தீன் அலி அகமது மற்றும் கழகத்தி னர் உற்சாக வரவேற்பு அளித்த னர். தும்பைபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட் டது. அதேபோல் ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான் என்ற பாட் டையா சார்பில் வரவேற்பு அளிக் கப்பட்டது. தியாகச்சீலர் கக்கன் சிலைக்கு நடைபயண க்குழு சார் பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது.
திருமங்கலம்
டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ஆகிய பகுதிகளுக்கான இரண்டா வது நாள் நடை பயணம் சனிக் கிழமையன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.இளங்கோ வன், பா.ரவி, மாவட்டக் குழு உறுப் பினர்கள் சொ.பாண்டியன், டி.ஏ. இளங்கோவன் தலைமையில் டி.கல்லுப்பட்டியில் இருந்து நடை பயணம் துவங்கியது. டி.கல்லுப் பட்டி, வன்னிவேலம்பட்டி, பாப்பு நாயக்கன்பட்டி, ரெங்கபாளையம், டி.குன்னத்தூர், புதுப்பட்டி ஆலம் பட்டி, வழியாக திருமங்கலம் சென்றடைந்தது. அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. நிறை வாக திருமங்கலத்தில் விளக்க கூட்டம் நடைபெற்றது. கட்சி மற்றும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க கிளைகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நடைபயணத்தில் 96வது மாமன்ற உறுப்பினர் என்.விஜயா, மாவட்டக் குழு உறுப்பினர் க. பிரேமலதா, வி.முத்துராஜ், மூத்த தோழர் பொன்.கிருஷணன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன், கட்சியின் டி. கல்லுப் பட்டி ஒன்றிய செயலாளர் வி.சம யன், திருமங்கலம் தாலுகாச் செய லாளர் ஆர்.மூர்த்தி, திருப்பரங்குன் றம் தாலுகா செயலாளர் எம்.ஜெயக்குமார், அவனியாபுரம் தாலு காச் செயலாளர் ஏ.தனபாலன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.