ஜன.31 மதுரையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மதுரை,ஜன.27- மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 31 ஆம் தேதியன்று பிற்பகல் 4 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அசோசியேசன் தலைவர்கள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள், தொழிலாளர் நல ஆய்வர், அனைத்து குடிமைப்பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நாள் வேலை கோரி
மானாமதுரை:மின்கம்பத்தில் கார் மோதி பெண் பலி
சிவகங்கை,ஜன.27- மானாமதுரை எம்.கரிசல்குளம் அருகே நிகழ்ந்த விபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை அலுவலக ஊழியர் பலியானார். வடசென்னை மாவட்டம் இந்திரா நகர் வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சண்முகராஜன் .இவரது மனைவி வின்னிலெட்சுமி (வயது 32). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை அலுவலகத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வின்னிலெட்சுமி, வீரணன் மகன் ரகுபதி (வயது 57),ஆனந்த் மனைவி ஜெயபிரபா (வயது 30 ) உள்ளிட்டோர் காரில் சென்னையிலிருந்து முதுகுளத்தூர் அருகேயுள்ள சூசையப்பர்பட்டினம் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி மானாமதுரை எம்.கரிசல்குளம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது காரின் டயர் வெடித்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வின்னிலெட்சுமி உயிரிழந்தார். ரகுபதி, ஜெயபிரபா ஆகியோர் பலத்த காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மானாமதுரை காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் முகம்மது தாரிக் அமீன், ஜகாங்கீர், தலைமைக்காவலர் பூமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் தகராறு செய்த ஆயுதப்படை காவலர் கைது
காரியாபட்டி, ஜன.26- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார். காரியாபட்டி அருகே உள்ள ஆண்மைப் பெருக்கி பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(35). இவர் விருதுநகர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், காரியாபட்டி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் மணிமாறன் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த வெங்கலட்சுமி என்ற பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டாராம். இதையடுத்து, அப்பெண் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காவலர் மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே இரு புகார்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேனி கண்மாய்களின் மீன்பிடி ஏலத்தில் தகராறு-ஒத்திவைப்பு
தேனி,ஜன.27- தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்க ளின் மீன்பிடி ஏலம் ஆண்டி பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவல கத்தில் கடந்த நான்கு நாட்க ளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை யும் மாலையும் கண்மாய் கள் தரம் வாரியாக பிரிக்கப் பட்டு ஏலம் நடைபெற்று வருகிறது . ஜனவரி 27 அன்று நான் காம் கட்டமாக பாப்பம் பட்டி கண்மாய் ஏலம் நடை பெற்றது. இதில் ஏலம் கேட்டு விண்ணப்பித்தவர்கள் நேரில் வராமல் தங்களுக்கு பதிலாக ஆதரவாளர்கள் பலரை அனுப்பி வைத்தி ருந்தனர். இதற்கு மற்ற ஏல தாரர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர் . இதனால் ஏலத்திற்கு விண்ணப்பித்த வர்களை மட்டுமே அனு மதிக்க முடியும் என்றும் அவர்களது ஆதரவாளர்க ளை அனுமதிக்க முடியாது என்றும் கூறி மீன்வளத்துறை அதிகாரிகள், அவர்களை ஏலத்தை விட்டு வெளியேறு மாறு கூறினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து கூட்டத் தை விட்டு வெளியேற மறுத்த ஏலதாரர்களின் ஆதர வாளர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் மற்ற ஏல தாரர்களிடமும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் . சமாதானப்படுத்த முயன்ற காவல்துறையினரிடமும் கடும் வாக்குவாதம் செய்த னர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஏலம் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது . இதையடுத்து விண்ணப் பித்தவர்களை தவிர அவரது ஆதரவாளர்கள் அனை வரையும் ஏலம் நடைபெறும் இடத்தை விட்டு போலீசா ரால் வெளியேற்றப்பட்டு மீண்டும் ஏலம் நடைபெற் றது . அப்போது பாப்பம் பட்டி கண்மாய் மீன்பிடி ஏலத்தை பாலமுருகன் என்பவர் 74 ஆயிரத்து 100 ரூபாய்க்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தார். இதையடுத்து அனைவரை யும் காவல்துறையினர் மீன் வளத்துறை அலுவலகத்தை விட்டு வெளியேற்றினர்.
கல்குவாரிக்கு எதிராக வீடுகளில் கருப்புக்கொடி
திருவில்லிபுத்தூர், ஜன.27- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை பணிக்காக கல்குவாரி அமைக்கப்பட்டுள் ளது. கல் குவாரி அமைவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து, விவசாயம் பாதிக்கப்படும் எனக்கூறி அப்பகுதி விவசாயி கள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜன வரி 26 அன்று கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரி வித்து அச்சம்தவிர்த்தான் பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.
சிபிஎம் ஊழியர்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் ஜன.31 முதுகுளத்தூரில் கண்டனப் போராட்டம்
இராமநாதபுரம்,ஜன.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழி யர்களை தாக்கிய சமூக விரோதிகளைக் கண்டித்து முதுகுளத்தூரில் ஜனவரி 31 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டை விளக்கி முது குளத்தூர் தாலுகாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சங்கத்தி னர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிமுகவினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தையும் இழிவுபடுத்தி பேசியதுடன் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே .கணேசன், தாலுகா செயலாளர் பி.அங்குதன் ஆகி யோரை தாக்கினர். காயமடைந்த பி.அங்கு தன் முதுகுளத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக் காக இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவில்லை. உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி யும் இந்த தாக்குதலை கண்டித்தும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 31 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் ஜனநாயக சக்திகளும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.