தேனி ,ஏப்.22- தங்க நகைக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட விபரங்கள் குறித்து தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் தேனி அருகே நாகலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: தேனி மாவட்டத்தில் 93 சங்கங்கள், 108 கிளைகள் மூலம் 27,305 தகுதி வாய்ந்த பயனாளி களுக்கு ரூ.95.83 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றுகள் மற்றும் நகைகள் வழங்கப்பட்டுள்ளது. நாகலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தங்க நகைக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 223 பயனாளிகளுக்கு ரூ.64.12 லட்சம் மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விவரங்கள் கூட்டுறவுச் சங்கம், வங்கியில் பொது மக்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் விளம்ப ரப் பலகையில் பொருத்தி வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.மேலும், நகை கடன் தள்ளுபடி தொடர்பான பதிவேடுகளை முறையாக பராம ரித்திடவும், விவசாயிகளுக்கு தரமான உரங்களை விநியோகம் செய்திடவும், இருப்பு தொடர்பான விவரங்களை உரிய பதிவேடுகளில் தினசரி பதிவு செய்திடவும், பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை ஆட்சியர் அறிவுறுத்தினார்.