districts

img

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிஐடியு-மாதர் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம்,மார்ச் 10-  சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்0 தும் காரல் மார்க்ஸ் பற்றி அவதூறாக பேசிய ஆளுநர் ரவியை கண்டித்தும் இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சமுசிகாபுரத்தில் சிஜடியு சார்பில் கு.சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எம்.முனியாண்டி,  சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.சோமசுந்தரம் ஆகியோர் பேசினர். கேஸ் விலை உயர்வைக் கண்டித்து திண்டுக்கல் ஒன்றியம் ரெண்டலப்பாறையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் தங்கமணி, கிளைத்தலைவர் தனமேரி, செயலாளர் ஞான பாத்திமாமேரி  ஆகியோர் பேசினர்.