districts

img

கூட்டுறவுத்துறையை தனித்துறையாக அறிவிக்க சிஐடியு வலியுறுத்தல்

இராமநாதபுரம், செப்.17- சிஐடியு இராமநாதபுரம் மாவட்ட  பத்தா வது மாநாடு இராமேஸ்வரத்தில்  மாவட்டத் தலைவர் எம். அய்யாத்துரை தலைமையில் நடைபெற்றது. எஸ்.ஏ. சந்தானம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். எம் கருணா மூர்த்தி வரவேற்புரையாற்றினார். மாநில உதவிப் பொதுச்செயலாளர் வி.குமார் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச்  செயலாளர் எம்.சிவாஜி வேலை அறிக்கை யையும் மாநிலப் பொருளாளர் ஆர்.முத்து  விஜயன் நிதி அறிக்கையையும் சமர்ப்பித்த னர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.கணேசன் வாழ்த்திப் பேசினார். மாநிலச் செயலாளர் எம். மகாலட்சுமி நிறைவுறையாற்றினார்.  நிர்வாகிகள் தேர்வு: மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்டச் செயலாளர் எம் சிவாஜி, மாவட்டப் பொருளாளர் ஆர்.முத்து விஜயன், துணைத் தலைவர்கள் எம். அய்யாத்துரை, ஆர்.குருவேல், ஏ.சுடலைகாசி, எம்.ஆர், முரளி, கே.பச்சமால், எம்.மலைரா ஜன் கே.தனுஷ்கோடி, வி.பாஸ்கரன், துணைச் செயலாளர்களாக டி.ராஜா, எம்.கரு ணாமூர்த்தி, ஆர். வாசுதேவன், பிரான்சிஸ் முகைதீன், அப்துல் காதர், காசிநாதன், என்.பி. செந்தில்,  மல்லிகா.  தீர்மானங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நேரடியாக, நேர்மையாக செயல்படுத்த வேண்டும். மின்வாரியத்தில் 300-க்கும் மேற்பட்ட ஒப் பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கூட்டுறவுத்துறை தனித்துறை யாக அறிவிக்க வேண்டும். கைத்தறி தொழி லாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;