நாகப்பட்டினம்\ மயிலாடுதுறை, டிச.19 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கொடி யாலத்தூர் கிராமத்தில் பல் வேறு கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த விழா கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தை யன் தலைமையில் நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள 15 குடும்பத்திற்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். துவக்க நிகழ்வாக உழைப்பாளி மக்களுக்கான செங்கொடியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி ஏற்றி வைத்தார். கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று, வாழ்த்து தெரிவித்து நாகை மாவட்ட செயலாளர் வி.மாரி முத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன் சால்வை அணிவித்தார். வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஏ.சிவக் குமார் மற்றும் மாவட்ட குழு, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பட்டவர்த்தி
மயிலாடுதுறை மாவட்டம் மணல் மேடு அருகேயுள்ள பட்டவர்த்தி கிராமத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.மேகநாதன், ஏ.அறிவழகன், வட்ட குழு உறுப்பினர்கள் ஏ.ராஜேஷ், கே.குமரேசன், இளந்தோப்பு கட்சி கிளை செயலாளர் கே.மகேந்திரன், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றிய துணைச் செய லாளர் ஜெயகோபால் உள்ளிட் டோர் புதிதாக கட்சியில் இணைந்த வர்களை வாழ்த்தி வரவேற்றனர்.