தூத்துக்குடி,டிச 12 தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, கீழ அழகாபுரி பகுதிகளில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கீழ அழகாபுரி, மேல அழகாபுரி, சிலுவை பட்டி கத்தோலிக்க தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழன்டா கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வில்சன், ஜேக்கப் மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் பங்கேற்றனர். கீழ அழகாபுரியில் ஊர்த்தலைவர் வழக்கறிஞர் மாடசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்பத் சாமிவேல், முன்னாள் மாவட்ட தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்த னர். தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் சிறப்புரை ஆற்றினார். தூத்துக்குடி ஊரக வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர் சார்லஸ் உட்பட பலர் பங்கேற்றனர். சாத்தான்குளம் சாத்தான்குளம் ஒன்றியம் எழு வரைமுக்கி, நகனை டிஎன்டிடிஏ தொடக் கப்பள்ளியில் தன்னார்வலர்களை தேர்வு செயயும் விதமாக இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாத்தான் குளம் வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி தலைமை வகித்தார். இதில் தமிழக அரசு அறிவித்துள்ள இல்லம் தேடி கல்வி பயன்பாடு குறித்தும், மாணவர்கள் கல்வி நலன்குறித்தம் கலை குழுவினர் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி தாளாளர் ஸ்டீபன்பால் ஞான ராபின்சன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொன்ராணி, செல்வி, ஊராட்சித் தலை வர்கள் அழகேசன், ஜெயா உள்ளிட்ட ஊர்மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.