தேனி, மார்ச் 27- மலை கிராமத்தில் செயல்பட்டு வந்த அங்கன் வாடி மையத்தை மூடுவ தற்கு எதுவாக ஊழியர் மாற் றப்பட்டதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக் கள் முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர். க.மயிலாடும்பாறை ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்டது வண்டியூர் கிராமம். இம் மலை கிராமத்தில் 30 ஆண்டு களுக்கு மேலாக செயல் பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 50 க்கு மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரு கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறி விக்கப்பட்ட புலிகள் காப்ப கத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த கிராமம் வருகிறது. இதன் காரணமாக எந்த நேரத்தி லும் கிராமத்தை விட்டு வெளி யேற்றப் படலாம் என்ற அச் சம் இக்கிராம மக்களிடம் நிலவுகிறது. இந்நிலையில் இக் கிரா மத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பணி புரிந்த அங்கன்வாடி ஊழியர் மாற்றப்பட்டுள்ளது மட்டு மல்லாமல் புதிய ஊழியரை யும் நியமிக்கவில்லை. இதன் காரணமாக வண்டியூர் கிராம மக்கள், பெண்கள் ,குழந்தை கள் உட்பட 50 க்கு மேற் பட்டோர் ஆட்சியர் அலுவல கத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட் டத்தில் ஈடுபட்டுவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கிய பின்னரே அங்கி ருந்து கலைந்து சென்றனர்.