districts

img

வ.உ.சி. துறைமுகம் சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாறும்

தூத்துக்குடி, செப். 24 தூத்துக்குடி வ.உ.சி.  துறைமுகம் சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக நிச்சயம் மாறும் என்று வ.உ.சி துறைமுக ஆணைய  தலைவர் தா.கி.ராமச்சந்தி ரன் கூறினார். தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70-ஆவது ஆண்டு பவள விழா தனியார் ஓட்டலில் நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் ஆனந்த் மொராயிஸ் தலை மை தாங்கினார். வ.உ.சி துறைமுக ஆணையத் தலை வர் தா.கி.ராமச்சந்திரன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணி யன், மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் விழா வில் சிறப்பு அழைப்பாளர்க ளாக கலந்து கொண்டு பேசினர்.  விழாவில் வ.உ.சி துறை முக ஆணையத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் பேசும் போது, வ.உ.சி. துறைமுகத் தில் பல்வேறு வளர்ச்சி பணி கள் நடந்து வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாற்ற வேண்டும் என்பது தான் அனைவரது எண்ணமாக உள்ளது. எங்க ளது அனைத்து திட்டங்க ளின் மைய புள்ளியும் சரக்குப்  பெட்டக பரிமாற்று மையம் தான்.

 தற்போது உலகில் நில வும் சூழ்நிலை, இலங்கை யில் நிலவும் நிலைமை மற்றும் நமது துறைமுகம் அமைந்துள்ள முக்கி யத்துவம் வாய்ந்த இடம் ஆகிய காரணங்களால் சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக தூத்துக்குடி துறைமுகம் நிச்சயம் மாறும். நமது கனவு விரைவில் நிறை வேறும். இதன் ஒரு பகுதி யாக துறைமுகத்தில் வெளித் துறைமுக விரிவாக்க பணி கள் ரூ.7ஆயிரம் கோடியில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு துறைமுகம் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.  நடப்பு ஆண்டில் 40 மில்லி யன் டன் சரக்குகள் கையா ளப்படும். ரூ.800 கோடி வருவாய் கிடைக்கும் என நம்புகிறோம். தூத்துக்குடி துறைமுக பகுதியில் திரவ ஹைட்ரஜன், திரவ அமோனி யா, பசுமை அமோனியா போன்றவை தயாரிக்கும் நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வரு கிறோம். இது போன்ற பணி கள் மூலம் வ.உ.சி. துறை முகம் சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று கூறினார்.  விழாவில் செயலாளர் மோகன், துணைத் தலைவர் ஜெயந்த் தாமஸ், துணை செயலாளர் சகாயராஜ், பொ ருளாளர் செலஸ்டின் வில்ல வராயர், விழாக் குழு ஆலோசகர்கள் ஜே.பி.ஜோ வில்லவராயர், பி.எஸ்.டி.எஸ். வேல்சங்கர், ஆர். எட்வின் சாமுவேல், ஒருங்கி ணைப்பாளர் டேவிட்ராஜா உட்பட கப்பல் முகவர்கள், ஏற்றுமதி, இறக்குமதியா ளர்கள், துறைமுக, விமான நிலைய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;