இராமநாதபுரம், ஆக.14- இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க முடியாத நிலையில் துணைத் தலைவர் உள்ளிட்ட 12 வார்டு உறுப்பி னர்கள் பதவி விலகல் கடிதத்தை ஆட்சிய ரிடம் அளித்தனர். இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கல் ஊராட்சியில் ஆண்டிச்சிகுளம், பொட்டால் பச்சேரி, தொட்டியபட்டி, களநிர் மங்கலம், மதினா நகர், காந்தி நகர் கிராமங்கள் உள்ளன. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் குடிநீர் தட்டுப் ்பாட்டை போக்க மனு அளித்தும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஒன்றிய அதி காரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாங்கள் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக துணைத்தலைவர் நூருல் அமீன், உறுப்பி னர்கள் தெய்வ சுந்தரி, யூசுப்,சங்கர், சிவசாமி, போதும் பொண்ணு, காளியம் மாள், செய்யதம்மாள், பாத்துமுத்து, ரமேஷ், பாலாமணி, கற்பகவள்ளி ஆகி யோர் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரனைத் திங்கட்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.