districts

தேசிய அறிவியல் தின விழா

அறந்தாங்கி, மார்ச்.3-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள ஆவணத்தான்கோட்டை அரசு மேற்கு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா நடைபெற்றது.  இதில், பள்ளியின் தலைமையாசிரியர் ப.கலைச் செல்வி  வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை  புஷ்கரம் வேளாண் கல்லூரி மாண வர்கள் தன்னார்வலர்களாக கலந்து கொண்டனர்.  ‘அறிவியலும் அப்துல் கலாமும்’, ‘அலைபேசி யும் சிட்டுக்குருவியும்’ என்ற தலைப்பில் மாணவர்க ளுக்கும் பேச்சுப் போட்டியும், ‘அன்றாட வாழ்வில் அறி வியல்’ என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகளும் நடை பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் சான்றிதழ்க ளையும் பரிசுகளையும் வழங்கினர். பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பாஸ்கரன் நன்றியுரை கூறினார்.