அறந்தாங்கி, மார்ச் 15- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடி ஒன்றியம் கோட்டைபட்டிணம் ஜகு பர்அலி (59) காலமானார். இவருக்கு மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கோட்டை பட்டிணம் கடைத்தெருவில் கோழி இறைச்சிச் கடை நடத்தி வரும் ஜகு பர்அலி செவ்வாயன்று காலை வியாபா ரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந் துள்ளார். அப்போது திடீரென உடல்நலக் குறைவு மரணமடைந்தார். அவரது மரணச் செய்தியறிந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், மாவட்ட குமு உறுப்பினர் சி.சுப்பிரமணியன், மண மேல்குடி ஒன்றியச் செயலாளர் கரு.இராம நாதன், ஆவுடையார்கோவில் ஒன்றியச் செயலாளர். நெருப்பு முருகேஷ், கட்சி கிளைச் செயலாளர்கள். சேகர், அசார், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் காளி தாசன், தமுஎகச-மாநிலச் செயற்குழு உறுப் பினர் கவிஞர் ஜீவீ, ரபீககான் உட்பட ஏரா ளமானோர் ஜகுபர் அலி உடலுக்கு செங் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர். மறைந்த ஜகுபர் அலி வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர், கட்சியின் ஒன்றியக் குமு உறுப்பினர் பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியதோடு பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கேற்றுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.