புதுக்கோட்டை, அக்.5 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் அழைத் துப் பாராட்டினார். புதுக்கோட்டை மாவட்டத் தில் தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில், தமிழ்நாடு நாள் விழா, முத்தமிழறிஞர் கலை ஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கிடையே பேச்சுப் போட்டி மற்றும் கட்டு ரைப் போட்டிகள் நடை பெற்றன. அதனைத்தொடர்ந்து இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித் தார். இந்நிகழ்வில் 27 மாணாக் கர்களுக்கு ரூ.1,06,000 மதிப்பிலான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார். உதவி இயக்குநர் ப.நாகரா ஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.