districts

போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க உதகையில் அதிநவீன தானியங்கி வாகனப் பதிவு கேமராக்கள்

உதகை , நவ. 28- உதகையில் போக்குவரத்து விதி மீறல் களை கண்காணித்து அபராதம் விதிக்க அதி நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப் பட்டு உள்ளதென மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் தெரிவித்ததாவது, நீலகிரி மாவட்டம், உத கையில் போக்குவரத்து விதி மீறல்களைத் தடுக்கும் வகையில் சேரிங்கிராஸ் சந்திப் பில் வாகனப் பதிவு எண்ணை பதிவு செய்ய ஒன்பது கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளது. இந்த கேமராக்கள் மூலம் போக்கு வரத்து விதிமீறல்களையும், குற்ற செயல்க ளில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக நகரில் முக்கிய பகுதியாக விளங்கும் சேரிங் கிராஸ் சந்திப்பு பகுதியில் உள்ள கூடலூர் சாலை, கமர்சியல் சாலை ,கோத்தகிரி சாலை, குன்னூர் சாலை ஆகியவற்றில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  

இவை அனைத்தும் பைபர் கேபிள் இணைப்பு வழியாக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவா கும் வகையிலும், கண்காணிக்கும் வகையி லும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்க ளில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்கள் தானியங்கி முறையில் எடுக்கப்பட்டு, பின் னர் அவர்களின் முகவரிக்கு அல்லது கைப் பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக விதி மீறல் தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.  மேலும்,  அபராதம் ஆன்லைன் மூலமாக செலுத்தும் வசதி https://echallan. parivahan.gov.inl என்ற இணையதளத் தின் மூலமாக செலுத்த வழி வகை செய்யப் பட்டுள்ளது. தற்போது இந்த தானியங்கி முறை கண்காணிப்பின் சோதனை ஓட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது. மேலும், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல்  தானியங்கி கண்காணிப்பு முறை முழுமை யாக செயல்படத் துவங்கும் என அவர் தெரி வித்தார்.