districts

img

ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திற்கு குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானிகள் பயணம்

நாகர்கோவில், மே 29- கன்னியாகுமரி மாவட்டம், குமரி அறிவியல் பேரவை சார்பில் இளம் விஞ்ஞானிகள் 43 பேர் ஒன்பது வழிகாட்டிகளுடன் ஸ்ரீ ஹரிக்கோட்டா விண்வெளி ஆய்வு மையத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர். விண்வெளி ஆய்வுமைய விஞ்ஞானிகளுடன் ‘வாழ்வியல் நிலைத்தன்மைக்காக விண்வெளி ஆய்வின் பங்களிப்பு என்னும் தலைப்பில் கலந்துரையாடுகிறார்கள். இதற்காக ஞாயிறன்று (மே 29) குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி  மு.வேலையன் தலைமையில் பயணம் மேற் கொண்ட இளம் விஞ்ஞானிகளை திருவனந்த புரம் கோளரங்கத்தின் முன்னாள் இயக்குநர் அருள் ஜெரால்டு பிரகாஷ் வாழ்த்தி வழி யனுப்பி வைத்தார்.  பயணம் மேற்கொண்ட இளம் விஞ்ஞானிகள்  மே.30 திங்களன்று ஆய்வை முடித்துவிட்டு, மே 31 செவ்வாயன்று சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி ஏரோஸ்பேஸ் பேராசிரியர்களுடன் கலந்துரையாடுகின்றனர். மாலையில் ஐஐடி பேராசிரியர் முனைவர் பாண்டியன் மற்றும் விஞ்ஞானி பொன்ராஜ் ஆகியோருடன் கலந்து ரையாடலுடன் நிகழ்ச்சியை முடித்து ஊர் திரும்ப உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.