நாகப்பட்டினம் / கே.வரதராஜன் நினைவரங்கம், செப்.18- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 ஆவது மாநில மாநாட்டின் பிரதிநிதிகள் அமர்வு மாநாடு நாகையில் கே.வரதராசன் நினை வரங்கில் (வி.பி.என் மஹாலில்) ஞாயிறன்று காலை துவங்கியது. தோழர்.ஜி.மணி நுழை வாயில் வழியாக கம்பம் நகரிலிருந்து வந்த மாநாட்டுக் கொடியினை மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரனும், தோழர். முத்துபொருமாள் நினைவு கொடி மரத்தை மாநில செயலாளர் பி.டில்லி பாபுவும், வெண்மணி தியாகிகள் நினைவு சுடரை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச்செயலாளர் விஜுகிருஷ்ணனும், தோழர்.கோ.வீரய்யன் நினைவுச் சுடரை மாநில துணைத்தலைவர் கே.முகமது அலியும், தோழர் கே.வரதராசன் நினைவு சுடரை அகில இந்திய நிதி செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத்தும் தோழர்.பி.எஸ்.தனுஷ்கோடி நினைவு சுடரை மத்திய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவும், தோழர்.என்.வெங்கடாசலம் நினைவு சுடரை மாநிலக்குழு உறுப்பினர் ச.அனுவும் பெற்றுக்கொண்டனர். பின்னர் சங்கத்தின் மாநாட்டு கொடியினை மூத்த தலைவர் எம்.நடராஜன் ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கான அஞ்சலி தீர்மானத்தை மாநில செயலாளர் சாமி.நடராஜன் வாசித்தார். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான நாகை மாலி வரவேற்று பேசினார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் .அசோக் தாவ்லே மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில அமைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்(சிபிஐ) மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாநில செயலாளர் ஏ.சந்திரமோகன், அகில இந்திய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ஆ.ரங்கசாமி ஆகியோர் உரையாற்றினர். வேலை மற்றும் அமைப்பு நிலை குறித்த அறிக்கையை மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் முன்மொழிந் தார். வரவு -செலவு அறிக்கையை மாநில பொரு ளாளர் கே.பி.பெருமாள் தாக்கல் செய்தார்.