நாகப்பட்டினம், அக்.12 - நாகப்பட்டினம் மாவட்டம் தொழு தூர் மற்றும் நாட்டிருப்பு ஆகிய இரு கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடி அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் அறு வடை இடத்திலிருந்து தூரமாக இருப்ப தால், நெல் கொள்முதல் நிலையங் களை அருகில் அமைத்துத் தர சட்ட மன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி அப்பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்றார். அரசின் வழிகாட்டுதலோடு கீழ்வேளூர் ஒன்றி யம் தெற்கு பனையூர் ஊராட்சியில் உள்ள நாட்டிருப்பு என்ற கிராமத்தி லும், தலைஞாயிறு ஒன்றியம் கொத்தங் குடி ஊராட்சி தொழுதூர் என்ற கிராமத் திலும் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை திறந்து வைத்து விற்ப னையை தொடங்கி வைத்தார். கீழ்வேளூர் ஒன்றியம் நாட்டிருப்பு கிராமத்தில் சிபிஎம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தை யன், விதொச மாவட்டக் குழு உறுப்பி னர் ஏ.எம்.பாலசுப்ரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், தலை ஞாயிறு ஒன்றியம் தொழுதூர் கிரா மத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, திமுக ஒன்றிய செயலாளர் மகா.குமார் ஒன்றிய கவுன் சிலர் ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.