districts

img

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், பிப்.6- தமிழ்நாடு சத்துணவு,  அங்கன்வாடி ஊழியர் சங் கங்களின் கூட்டமைப்பின் மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு  சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர்களுக்கு வரு வாய் கிராம உதவியாளர் களுக்கு இணையாக அக விலைப்படியுடன் ரூ.6,750 மாதாந்திர சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், சத்து ணவு அங்கன்வாடி திட்டங்க ளில் பணியாற்றி வருபவர் களுக்கு காலம் முறை ஊதி யம் வழங்குவதற்கு ஏதுவாக அரசுத்துறை காலிப் பணி யிடங்களில் 50 சதவீத பணி யிடங்களை ஒதுக்கி அதில்  தகுதி உள்ள சத்துணவு, அங்  கன்வாடி ஊழியர்களை பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், ஓய்வு பெற்ற சத்து ணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மரிய.ஜெய ராஜ், மாவட்டத் தலைவர் எம். ராமச்சந்திரன், மாவட்டப்  பொருளாளர் பி.இராஜா மணி, இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செய லாளர் கே.தங்கமணி, அரசு  ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் அந்துவன் சேரல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.