districts

img

அலிவலத்தில் சமத்துவ பொங்கல் 

திருவாரூர், ஜன.13- திருவாரூர் மாவட்டம் அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது.  விழாவில் சிறுவர் / சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம்,  சாக்கு ஓட்டம், மிதிவண்டி போட்டி, கனியும் கரண்டியும், பெண்களுக்கான கோலப்போட்டி போன்ற போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து, சமத்துவ பொங்கல் திருவிழா வாழ்த்து மடலை மாவட்ட ஆட்சி யர், மாவட்ட ஊராட்சித்தலைவர், மகளிர் சுய உதவிக்குழு உறுப் பினர்களுக்கு வழங்கினார்.  விழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ர மணியன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, துணை இயக்கு நர் (ஊராட்சிகள்) பொன்னியசெல்வன், வட்டாட்சியர் நக்கீரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.