districts

img

மாமேதை மார்க்ஸ் பிறந்த நாள் : திருவண்ணாமலையில் செங்குடை ஊர்வலம்!

மே - 5 மாமேதை காரல் மார்க்சின் பிறந்தநாளையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் தலைமையில் மே 29 புதனன்று செங்குடை ஊர்வலம் நடைபெற்றது. திருவண்ணாமலை - வேலூர் சாலை அண்ணா நுழைவாயில் அருகிலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். பத்ரி, இரா. சிந்தன், மூத்தத் தலைவர் எம். வீரபத்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் செங்குடைகளுடன் கலந்து கொண்டனர்.