திருவண்ணாமலை,செப்.4- சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை, வேலூர் தீபம் நகர் அருகில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி, பொதுமக்க ளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக, அரு காமை கிராமங்களில் இருந்து வருகிற விவசாய பொருட்களுக்கும், விவ சாய டிராக்டர்கள், லோடு லாரிகள் மற்றும் மினிலோடு லாரிகள் என அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்க கட்டண கூடுதலாக வசூ லிக்கப்படுகிறது. சுங்கச் சாவடி அமைப்பதற்கான வழிமுறைகளில் நகர எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தள்ளி இருக்க வேண்டும் என்பது இங்கு மீறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகர எல்லை வேலூர் சாலை, அண்ணா நுழைவு வாயில் வரை நீடிக்கிறது. அண்ணா நுழைவு வாயிலி லிருந்து, தீபம் நகர் சுங்கச் சாவடி இடையே 5 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே உள்ளது. தீபம் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடி சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது எனவே தீபம் நகர் சுங்கச் சாவடி முழுமையாக அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட செய லாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள், எம். வீரபத்திரன், எம்.பிரக நாதன், மாவட்டக் குழு உறுப்பினர் ச.குமரன் ஆகியோர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.