districts

img

சிறு குறு தொழில்களை பாதுகாக்க கோவை திருப்பூரில் இன்று மக்கள் கோரிக்கை மாநாடு

திருப்பூர், மார்ச் 3–

சிறு, குறு தொழில்களை பாது காக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் வியாழன்று (இன்று) நடைபெற உள்ள மக்கள் கோரிக்கை மாநாட் டில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று உரையாற்றுகி றார்.

மத்தியில் ஆளும் மோடி தலை மையிலான பாஜக அரசு கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக வெறித்தனமாக செயல்பட்டு சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையை சீர்குலைத்து வருகிறது. அத்துடன் தொழிலாளர்களின் நலன்களும் காவு வாங்கப்படுகின்றன. மத்திய அரசின் எதேச்சதிகாரமான நடவ டிக்கைகளுக்கு அடிபணிந்து, மாநில அதிமுக அரசும் பாஜகவின் பொருளாதார, தொழில் கொள்கை களை அப்படியே பின்பற்றி வருவ தால் தமிழகத் தொழில், விவசாயம் பெரும் சீரழிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு நகரம் என அறியப்படும் திருப்பூர் இன்று மத்திய, மாநில ஆட்சியா ளர்களின் சீர்குலைவு கொள்கைக ளால், தாக்குப்பிடித்து நிற்க முடியா மல் தள்ளாடி வருகின்றது. எனவே வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர் தல் பேரழிவில் இருந்து தமிழ கத்தை மீட்பதற்கு நடைபெறும் முக் கியமான அரசியல் போராட்டம் ஆகும்.  

கோவையில் மார்ச் 4 ஆம் தேதி (இன்று) மாலை 4 மணிக்கு கோவை சிவானந்தா காலணியில் நடைபெ றும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந் திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று உரையாற்றுகி றார். இதில், சிபிஎம்  அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், மாவட்டச் செயலாளர் வி. இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப் பினர்கள் சி.பத்மநாபன், என்.அமிர் தம், ஏ.ராதிகா, எம்.கண்ணன் ஆகி யோர் சிறப்புரையாற்றுகின்றனர். முன்னதாக, நிகழ்வில் புதுகை பூபா ளம் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி கள் நடைபெற உள்ளது.

மேலும், கட்சியின் பொதுச் செய லாளர் சீதாராம் யெச்சூரி கோவை நிகழ்வில் பங்கேற்று பிறகு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு செல்ல இருப்பதால் மாலை 4 மணிக்கு குறித்த நேரத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளது. எனவே,  கட்சி ஊழியர்கள் மற்றும் வர்க்க, வெகுஜன அமைப்பு களின் உறுப்பினர்கள் குடும்பம் குடும்பமாய் பங்கேற்று நிகழ்வை வெற்றியடையச் செய்ய வேண்டும் என கோவை மாவட்டச் செயாலா ளர் வி.ராமமூர்த்தி தெரிவித்துள் ளார்.

திருப்பூர்  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டக்குழு சார் பில் சிறு, குறு தொழில்களைப் பாது காப்போம், தொழிலாளர் நலன் களை காப்போம் என்ற முழக்கத்து டன் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட் டம் வியாழன்று (இன்று) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. திருப்பூர் யூனியன் மில் ரோடு ஸ்ரீ சக்தி திரை யரங்கம் அருகே நடைபெறும் இந் தப் பொதுக்கூட்டத்தல் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரை ஆற்றுகிறார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் தலைமை யில் நடைபெறும் இக்கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநில செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், டி.ரவீ ந்திரன், ஆர்.பத்ரி, ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ் கரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். மோடி ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து உறுதியோடு முன்களத் தில் நின்று போராடி வரும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி பங்கேற்கும், அரசி யல் முக்கியத்துவம் வாய்ந்த இக் கூட்டத்தில் அனைத்துத் தரப்பின ரும் பெருந்திரளாகப் பங்கேற்று இந்த பிரச்சாரக் கூட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் கேட்டுக் கொண் டுள்ளார்.

;