districts

அடுக்குமாடி குடியிருப்பு தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வழங்க கோரிக்கை

திருப்பூர், நவ. 27- திருப்பூர் மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடி குடியி ருப்புகளில் தரை தள வீடுகளை வழங்க வேண்டும் என்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் டி.ஜெயபால் தலைமையில் அந்த சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி களுக்கு போதிய வருமானம் இல்லாத சூழ்நிலை யில் வாடகை கொடுக்க இயலாமல் சிரமப்படு கின்றனர். எனவே பலவஞ்சிபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தை மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் பதிவு செய்துள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள் ளது.