திருப்பூர், டிச.15- தில்லியில் போராடி வரும் விவசாயிக ளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்பு போராட் டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து 20 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசானது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக செயல்பட்டு வருவதாக தெரி வித்து திருப்பூர் - அவிநாசி சாலையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணி கிருஷ்ணன், டி.ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதை யடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.