அவிநாசி, டிச.29- அவிநாசியில் சிப்காட்டுக்கு விவசாய நிலம் கையகப்படுத்தப்படமாட்டாது என்கிற தமிழக முதல்வரின் வாய்மொழி அறிவிப்பை, அரசாணையாக வெளியிட வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத் திற்குட்பட்ட தத்தனூர், புலிபார், புஞ்சை தாமரைக் குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் சுமார் 850 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் தொழிற் சாலை அமைய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதி காரிகளை சந்தித்து மனு அளிப்பது மட்டு மின்றி, கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வது, பொதுக்கூட் டங்களை நடத்துவது போன்ற பல்வேறு கட்ட இயக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் பெருமாநல்லூர் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச் சாமியை, பாதிக்கப்பட்ட விவசாயிகள் சந்தித்து சிப்காட்க்கு விவசாய நிலத்தை ஒதுக்கக் கூடாது என கோரிக்கை மனுவை அளித்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட தமிழக முதல்வர், அவிநாசியில் சிப்காட் தொழிற்சாலைக்கு விவசாய நிலம் கைய கப்படுத்தப்படாது என்று மேடையிலிருந்து அறிவிப்பை வெளியிட்டார். இதை வர வேற்றுள்ள விவசாயிகள், வாய்மொழி அறி விப்பை அரசாணையாக வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர்.