தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் மெயின் சாலையை ஒட்டி இருக்கும் மெலட்டூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் பழுதடைந்து, சுவர்களில் விரிசல் விட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு இயங்கி வந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. எனவே, பழுதடைந்த நிலையில் உள்ள இந்த கட்டத்தை இடித்து விட வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.