districts

img

உடல்நிலை பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் இருக்கும் கணவரை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்

தஞ்சாவூர், டிச. 21-  வெளிநாட்டில் உடல்நிலை பாதிக்கப் பட்டு, கோமா நிலையில் உள்ள தனது கண வரை, அங்கிருந்து தாயகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெண்  ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் துள்ளார். தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில், திங்களன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் திருவிசநல்லூர் சங்கர நாதர் குடிகாடு பகுதியை சேர்ந்த வீரம்மாள்  என்பவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ள தாவது; “எனது கணவர் புண்ணியமூர்த்தி(49). எங்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபா யில் உள்ள ஒரு உணவகத்தில்,

எனது கணவர்  புண்ணியமூர்த்தி வேலைக்கு சேர்ந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு  வந்துவிட்டு மீண்டும் அவர் துபாய்க்கு சென்று விட்டார். இந்நிலையில் அங்கு பணியில் இருந்த போது எனது கணவர் மயங்கி விழுந்துள் ளார். தொடர்ந்து, அவரை அங்கு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலை யில், எனது கணவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.  உடல்நிலை சரியில்லாத எனது கண வரை துபாயிலிருந்து இந்தியாவிற்கு வர வழைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். கூலித் தொழிலாளியாக, மூன்று குழந்தை களுடன் இங்கு உள்ள நான், எனது கண வரின் நிலை தெரியாமல் தவித்து வருகிறேன்.  எனவே இதுகுறித்து உடனே நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.”  இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

;